முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 78 கோடி இந்திய பணத்தை போலியான சுங்கத்துறை ரசீதுகளை பயன்படுத்தி அயல்நாட்டு வங்கி கணக்கிற்கு வரி ஏய்ப்பு ஒருவர் கைது

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சென்னை

சுமார் ரூ. 78 கோடி இந்திய பணத்தை போலியான சுங்கத்துறை ரசீதுகளை பயன்படுத்தி அயல்நாட்டு வங்கி கணக்கிற்கு வரி ஏய்ப்பு செய்து அனுப்பிவைத்த குற்றவாளிகளில் மேலும் ஒருவரை கைது செய்தனர்.

வழக்கு பதிவு

இந்தியன் வங்கியின், சென்னை ஆயிரம் விளக்கு கிளை மேலாளர் மனோகர் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் தங்களது வங்கியில் எட்டு நிறுவனங்களின் பெயரில் போலியான பெயர், முகவரி கொடுத்து வங்கி கணக்கு துவக்கி, அயல் நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி வரி செலுத்தி பரிவர்த்தனை செய்தது போல் போலியான சுங்கத்துறை ரசீதுகளை காட்டி சுமார் ரூ.78 கோடி இந்திய பணத்தை சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் வங்கி கணக்கிற்கு தங்களின் வங்கியின் மூலமாக செலுத்தி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதகவும், மேற்படி எட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரு குழுவாக சேர்ந்து சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலியான பெயர் மற்றும் முகவரிகளில் கணக்கு துவங்கி அதன் மூலமாக பல கோடி ரூபாய்களை அயல் நாட்டு வங்கி கணக்கிற்கு அனுப்பி இந்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்த குற்றவாளிகள் என தெரியவந்தது.

இந்நிலையில், தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இவ்வழக்கின் எதிரி ஹாரூன் ரசீது என்பவரை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து