தூத்துக்குடி மதுரை வரை புதிய ரயில் வழித்தட நில எடுப்பு மற்றும் ஒப்படைப்பு பணி கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      தூத்துக்குடி
tuty collector handover to land plan

தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய இரயில் வழித்தடம் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் மூலம் கையப்படுத்தப்பட்ட நிலங்களை  கேட்புத்துறையாகிய தென்னக இரயில்வேக்கு நில ஒப்படைப்பு சான்றினை கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்கள்.

நில எடுப்பு பணிகள்

தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய இரயில் வழித்தடம் 143.5 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை 18.7 கி.மீ நீளத்திற்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலும், இரண்டாவது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரை 51.3 கி.மீ நீளத்திற்கும், மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரை 73.5 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், மேலமருதூர் ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  தனியார் நிலங்கள் 71.09 ஹெக்டேரும், அரசு நிலங்கள் 3.778 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.  அதனை தொடர்ந்து, தூத்துக்குடி முதல் மேலமருதூர் வரை மொத்தம் 18.7 கி.மீ வரை முதல் கட்டமாக வடக்குசிலுக்கன்பட்டி, சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய சுமார் 8.5.கி.மீ நிளம் வரையிலான 3 கிராமங்களில் 24 ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தி அதற்கான நில ஒப்படைப்பு சான்றினை கலெக்டர் என்.வெங்கடேஷ் தென்னக இரயில்வே, மதுரை கோட்ட செயற்பொறியாளர் சந்துரு பிரகாஷ் அவர்களிடம், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.மேலும், நிலுவையில் உள்ள 3 கிராமங்களாகிய தெற்கு வீரபாண்டியபுரம், வாலசமுத்திரம், மேலமருதூர் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான நில ஒப்படைப்பு சான்று விரைவில் வழங்கப்படும் என கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன்இ உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிந்து, நில எடுப்பு தனி வட்டாட்சியர் லெனின், இரயில்வே உதவி பொறியாளர் ராஜேந்திர முத்துக்குமார், உள்ளீட்ட துறைசார் ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து