எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை தெற்கு ரயில்வே சார்பில் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டிற்கான புதிய கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, 2026 ஜனவரி மாதம் புதிய கால அட்டவணையை வெளியிட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும், தாமதத்தை குறைக்கும் வகையிலும் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில் சேவைகளை மேம்படுத்துவதிலும், ரயில்கள் தாமதம் இல்லாமல் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக நவீன சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தி வருகிறோம்.
மேலும், முக்கிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜின்களை மாற்ற வேண்டியம் அவசியம் இல்லை. இதேபோல, கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் வந்துள்ளது. அந்த மனுக்களைப் பரிசீலனை செய்து வருகிறோம். இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
2026-ம் ஆண்டிற்கான புதிய கால அட்டவணை இந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டு, ஜனவரி 1-ந்தேதி அமல்படுத்தப்படும். எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் போது சென்னை-கோவை, சென்னை-கன்னியாகுமரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் தற்போதுள்ளதை காட்டிலும், 40 நிமிடங்கள் வரை சேமிக்க முடியும். இது தொடர்பான ரயில்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


