காஞ்சிபுரத்தில் யாதவர் பேரவையின் 12 வது மாநில பொதுக் குழு கூட்டம்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 12 18

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் யாதவர் பேரவையின் 12 வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்தது.

 புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநிலத் தலைவர் சேலம் G. கண்ணன், பொதுச்செயலாளர் கோவை இரா.தங்கப்பழம், பொருளாளர் சென்னை ஜெய்குமார் ஆகியோர் புதிய பொலிவுடன் யாதவர் சேவை செய்ய உறுதி மேற்கொண்டுள்ளனர் என திருவேங்கட யாதவ் வரவேற்றார்.

கணக்கெடுப்பு

கூட்டத்தில் தஞ்சை, கோவை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். யாதவர் பேரவையின் நிறுவனர் மருத்துவர் காந்தையா தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காந்தையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பல ஆண்டு காலமாக தமிழக அரசு யாதவர் சமுதாயத்திற்க்கு உரிய அரசியல் பிரதிநித்துவம் அளிக்காமல் ஒரவஞ்சனை செய்து வருகிறது, தமிழகத்தில் மூன்றில் ஒருபகுதி மக்கள் தொகை இருந்தும் சாதிவாரியான கணக்கெடுப்பு பட்டியலை இதுவரையில் தமிழக அரசு வெளியிட தயங்குவது ஏன் என்று தெரியவில்லை என்றார்.

மேலும் யாதவர்கள் கல்வி நிதியில் இருந்து நடத்தப்படும் யாதவர் கல்லூரியை தமிழக அரசு திரும்ப தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினால் தான் கால்நடைகளை காப்பாற்ற முடியும் என்றும் ஆடு வளர்ப்பு நலவாரியத்தில் யாதவ குலத்தை சேர்ந்தவர்களை தான் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் பழையனூர் அருணகரி, காஞ்சிபுரம் கணேசன், கூரம் விஸ்வநாதன், செங்கல்பட்டு முரளிமோகன், பாலூர் கோதண்டம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து