சிவகங்கை கலெக்டர் .லதா, தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்;டம்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      சிவகங்கை
18 siva news

சிவகங்கை .-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் .க.லதா  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாணும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார்.
            மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா வழங்கக் கேட்டல், மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள், அங்கன்வாடி சமையலர் பணி கோருதல் மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 356 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
           சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பிரிவில் 3ஆம் இடம் பெற்ற மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.வி.யுவஸ்ரீ என்பவருக்கு புதுடெல்லி டாக்டர்.அம்பேத்கார் பவுண்டேசன் சார்பில் ரூ.40,000 -க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
          இக்கூட்டத்தில்; மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து