மத்திய அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      சென்னை
chennai 2017 12 18

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, டாக்டர்.இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2017யை முன்னிட்டு, நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், தலைமையில் பொதுப்பார்வையாளர்கள்கம்லேஷ் குமார் பந்த்,செல்வி அல்கா ஸ்ரீவஸ்தவாமுன்னிலையில் நடைபெற்றது.

 அடையாள அட்டை

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை-2017யை முன்னிட்டு, மாவட்ட தேர்தல்அலுவலர் முனைவர் தா.கார்த்திகேயன், தலைமையில், பொதுப்பார்வையாளர்கள் கம்லேஷ் குமார் பந்த்செல்வி அல்கா ஸ்ரீவஸ்தவா, முன்னிலையில், நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு (18.12.2017) அன்று அம்மா மாளிகையில் நடைபெற்றது.நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு அன்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பே வாக்குப்பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.

அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு முறையாக தேர்தல் விதிப்படி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா என்பதனையும், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டப்படுகிறதா என்பது குறித்தும், வேட்பாளர்களின் ஐயம் தீர்த்த பின்பு வாக்குப்பதிவு துவங்குகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும். வாக்காளர்களின் வாக்குப்பதிவு இரகசியம் காக்கும் வண்ணம் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனையும், வாக்குப்பதிவின்போது மையங்களில் நடைபெறும் சம்பவங்களை கூர்ந்து கவனித்திட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு மற்றும் வாக்களிக்க வராமல் இருக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்களை கண்காணித்திட வேண்டும். நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தினை வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் பூர்த்தி செய்து வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று தேர்தல் பொதுப்பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களை காட்டி வாக்களிக்கிறார்களா என்பதனையும், சுயமாகவும் சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை கண்காணித்து அறிக்கை தரவேண்டும். நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.அன்புச்செல்வன், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்/துணை ஆணையர் (வருவாய் () நிதி) .லலிதா, பலர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து