எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகன பேரணியை மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை வேங்கிக்காலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தி.மலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகன பேரணி புறப்பட்டது.
வாகன பேரணி
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை வகித்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தொடங்கிவைத்து பேரணியில் கலந்து கொண்டார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அறிவொறி பூங்கா மத்திய பேருந்து நிலையம் பெரியார்சிலை அண்ணாசிலை காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு சென்றடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது மக்கும் உடலை மனிதனுக்கு கொடுப்போம், அழியும் உறுப்பால் அடுத்தவரை வாழவைப்போம். உறுப்புகள் கொடுத்து உயிருக்கு உயிர்கொடுப்போம் மனிதனாக மண்ணுக்குள் போவதைவிட உடலுறுப்பை கொடுத்து மனிதனை வாழ வைப்போம் என்ற பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.நாராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான கே.ராஜ்மோகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஸ்வநாதன் மற்றும் நீதிபதிகள், அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் எஸ்.சையத்ரஷீத் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


