சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      கடலூர்
chithamparam mla issue relief fund

 சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராமத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

தீ விபத்து

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் குடிசை வீடு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.  இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் அசோகன், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், ஒன்றிய கழக அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், கிளை செயலாளர்கள் ஞானசேகரன், மாரிமுத்து, கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து