பள்ளிக்கரணை பகுதியில் காரை விற்று பணத்தை கொடுக்காமல் உரிமையாளரை ஏமாற்றிய மெக்கானிக் கைது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      சென்னை

புதுச்சேரி, நாவர்குளம், அண்ணா நகர் 2 வது தெரு, எண்.23 என்ற முகவரியில் பாபு, /29, /பெ.ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைக்காட்சியில் கேமராமேனாக வேலை செய்து வருகிறார்.

நீதிமன்றத்தில் அஜர்

பாபு கடந்த 08.04.2016 அன்று வெள்ளத்தால் சேதமடைந்த தனது ஹுண்டாய் ஐ-20 காரை நன்மங்களம் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வரும் விஜயகுமார் என்பவரிடம் கொடுத்து காரை சரி செய்து, விற்பனை செய்து பணம் தரும்படி கேட்டுள்ளார் . கார் மெக்கானிக் விஜயகுமார் மேற்படி காரை சரி செய்து வேறு நபருக்கு விற்று பணம் வாங்கியுள்ளார். ஆனால் இது வரை காருக்குரிய பணத்தை உரிமையாளர் பாபுவிடம் கொடுக்காமல் விஜயகுமார் ஏமாற்றி வந்துள்ளார்.

இது தொடர்பாக பாபு பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட கார் மெக்கானிக் விஜயகுமார், என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து