முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரைவு வார்டுகள் மறு வரையறை அறிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், திருநெல்வேலி மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறு வரையறை செய்த வரைவு வார்டுகள் மறு வரையறை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறு வரையறை அறிக்கை

வரைவு வார்டு மறு வரையறை அறிக்கையினை கலெக்டர் சந்தீப்நந்தூரி, வெளியிட, அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.பின்னர், கலெக்டர் தெரிவித்ததாவது-திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள வார்டுகள் 2011 மக்கள் தொகை அடிப்படையில், ஏற்கனவே உள்ள வார்டுகள் 2011 மக்கள் தொகை அடிப்படையில், சராசரியாக பிரிக்கப்பட்டு மறு வரையறை செய்யப்பட்டு, இன்று அறிக்கை வெளியிடப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 55 வார்டுகளாகவும், நகராட்சி பகுதியில் மொத்தம் 195 வார்டுகளாகவும், பேரூராட்சி பகுதியில் 572 வார்டுகளாகவும் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு மொத்தம் 26 ஆகவும், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மொத்தம் 266 ஆகவும், கிராம ஊராட்சி வார்டுகள் 3636 ஆகவும் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டுள்ள வரைவு கருத்துக்கள் மீது பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் வகையில் கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரையறை மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்து பூர்வமாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது கலெக்டர் அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) முத்து இளங்கோ, (உள்ளாட்சித் தேர்தல்) வசந்தி,  மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் கவிதா, பாஸ்கர், கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து