சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      சேலம்
2

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (27.12.2017) உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரத்தினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கினார்கள். இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது.

மறுவரையறை

சேலம் மாவட்டத்திற்குட்பட்ட நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சி வார்டுகள், 20 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளின் கிராம ஊராட்சி மன்ற வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எல்லைகளை தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு 27.12.2017ம் நாளான இன்று சம்மந்தப்ட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.வார்டுகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சி கோட்டங்கள் 60 வார்டுகளும், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய நகராட்சிகளில் 111 வார்டுகளும், 33 பேரூராட்சிகளில் 510 வார்டுகளும், மாவட்ட ஊராட்சிகளில் 29 வார்டுகளும், ஊராட்சி ஒன்றியங்களில் 288 வார்டுகளும், கிராம ஊராட்சிகளில் 3,597 வார்டுகளும் உள்ளது.

பதிவஞ்சல்

வெளியிடப்பட்டுள்ள வரைவு வார்டுகளின் முன்மொழிவுகளை பொதுமக்கள் பார்வையிட்டு 02.01.2018ம் தேதிக்குள் தங்களது கருத்துகள், ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளையும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது கலெக்டர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 05.45 மணி வரை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குழந்தைதெரசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து