முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய குற்றவாளி கைது

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      சென்னை

சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலை, எண்.32 என்ற முகவரியில் சத்யராஜ், /40, /பெ.முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14.01.2017 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார்.

விசாரணை

பின்னர் 21.01.2017 அன்று திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து 2 சவரன்தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.4,500/-ஐ திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சத்யராஜ் அசோக்நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அசோக்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அசோக்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கு மாம்பலம், பரோடா தெருவில் கண்காணித்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணைசெய்த போது மேற்படி சத்யராஜ் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதன் பேரில் அவரை போலீசார் கைது செய்து அசோக் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர் ராஜா () ஸ்ரீதர், என்பது தெரியவந்தது. குற்றவாளி ராஜா () ஸ்ரீதர் சென்னயில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி உள்ளதும், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 30 சைக்கிள்கள் மற்றும் 3 1/2 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜா () ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து