Idhayam Matrimony

குற்றாலம் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது

தேரோட்டம்

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும், இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 24 ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிN~க, அலங்கார தீபாராதனைகள், தினமும் இரவில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழா நடைபெற்ற நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு, இரவு 7 மணிக்கும் நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 27 ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று ( 28 ம் தேதி ) வினாயகர், முருகன், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் ஆகிய  பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 5 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.தேரோட்டத்தில் குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் செல்வகுமாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு வரும் 31 ம் தேதி காலை 10 மணிக்கு சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. ஜன.2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரைசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், மாலை 5 மணிக்கு திருக்கோவில் திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து