முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபியில் தேசிய அளவிளான வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டி பரிசு வழங்கினார்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      ஈரோடு
Image Unavailable

ஜார்கண்ட் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தைப்போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று தமிழகம்  ்பிய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையனை கோபிசெட்டிபாளையத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். தங்கம் வென்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வங்கினார்.

54 வீரர் வீராங்கனைகள்

மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தைப்போட்டியில் வெற்றி பெற்ற 54 வீரர் வீராங்கனைகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று 36 வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 16 பேர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அடுத்த மாதம் மாலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக வில்வித்தைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடுமாவட்டத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று பேர் தேசிய வில்வித்தைப்போட்டியில் தங்கம் வென்று உலக வில்வித்தைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

ஆசி பெற்றனர்

ஈரோடுமாவட்டம் நெரிஞ்சிப்பேட்டைப்பகுதியைச்சேர்ந்த மோனீஸ்வரன் இந்தியன் ரவுண்ட் பிரிவிலும் அதேபகுதியைச்சேர்ந்த ரோசினி என்ற மாணவி காம்பவுன் ரவுண்ட் பிரிவிலும் அம்மாபேட்டைப்பகுதியைச்சேர்ந்த ஸ்ரீராம் காம்பவுன் ரவுண்ட் பிரிவிலும் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். ஈரோடுமாவட்டத்தில் தேசிய வில்வித்தைப்போட்டியில் தங்கம் வென்று உலக வில்வித்தைப்போட்டிக்கு தேர்வானவர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை கோபிசெட்டிபாளைத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.

விளையாட்டில் வெற்றி பெற்று தங்கம் வென்ற குழந்தைகளை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டி பரிசு மற்றும் இனிப்பு வழங்கி கௌரவித்தார். அதனை தொடர்ந்து தமிழகத்திலிருந்து வென்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழத்து தெரிவித்தார். அதன்பின்னர் அவர்களது பட்டலைக்கேட்டுபெற்றுக்கொண்டு   மலேசியாவில் நடைபெறும் உலக வில்வித்தைப்போட்டியில் பங்கேற்ற தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து