வாலாஜா ஒன்றியத்தில் 1500பேருக்கு பொங்கல் பரிசு: அரக்கோணம் எம்.பி. கோ.அரி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      வேலூர்
wj

வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிதாங்கல் ஊராட்சியில் இலவச வேட்டி சேலை மற்றம் பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிதாங்கல் ஊராட்சியில் வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

இலவச வேட்டி சேலை

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பூங்காவனம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் தலைவர் எத்திராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அவரக்கரை ராமசந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனி, முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்ராக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 936குடும்பங்களுக்கு நியாய விலைகடையில் பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.

இதேபோன்று ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடையில் வேட்டி சேலைகளை எம்.பி. கோ.அரி வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.எல்.விஜயன், ஜம்புகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் பெல் கார்த்திகேயன், நகரசெயலாளர் என்.கே.மணி, ஊராட்சி செயலாளர்கள் தயாளன், எம்.எஸ்.மணி, கிளை செயலாளர்கள் நாகேஷ், அன்பழகன், செல்வராஜ், கோ.சண்முகம், சின்ராஜ், ஜெய்பால், முனிசாமி, பிச்சைமுத்து, வெங்கடேசன் மற்றும் வருவாய் ஆய்வாயளர் விஜயசேகரன் மற்றும் கிராம நிர்வாகி அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து