சுற்றுப்புறங்களை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் நடிகர் சசிக்குமார்

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      திண்டுக்கல்
30 kodai news

கொடைக்கானல் - சுற்றுப்புறங்களை தூய்மையாக பாதுகாக்க வேண்டும் என்று நடிகரும் திண்டுக்கல் மாவட்ட தூய்மை இந்தியா தூதுவருமான சசிக்குமார் பேசினார்.
 கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் வில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது இந்த கழிப்பறையினை நடிகர் சசிக்குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் ரோட்டரி சங்கத் தலைவர் ரோகன்சாம்பாபு தலைமை தாங்கினார். கொடைக்கானல் வில்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாமாரீஸ் வரவேற்றார். ரோட்டரி சங்கத்தின் முன்னாள் கவர்னர் சாம்பாபு முன்னிலை வகித்தார். இந்த விழாவில் நடிகரும் தூய்மை இந்தியா திட்டத்தின் திண்டுக்கல் மாவட்ட தூதுவருமான சசிக்குமார் பேசியதாவது. நான் எந்த கடை திறப்பு விழாவிற்கோ வேறு எந்த வியாபார நோக்கிலான திறப்பு விழாவிற்கோ சென்றதில்லை ஆனால் இது போன்ற பள்ளிக்கு என்ன தேவை என்று அறிந்து அதை செய்துள்ள ரோட்டரி சங்கத்திற்கு எனது பாராட்டுகள். மாணவர்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையானதாக பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் ரோட்டரி சங்க செயலாளர் ராஜ்குமார், கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி நிர்வாகி நிர்மலாசாம்பாபு, ரோட்டரி சங்க வருங்கால தலைவர் செல்வகுமார், ஆசாத், ஜேபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னள் ரோட்டரி சங்க தலைவர் சாந்த சதீஸ் நன்றி கூறினார்.
பட விளக்கம்: கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் வில்பட்ட அரசுப் பள்ளியில் கட்டப்பட்ட கழிப்பறையினை நடிகர் சசிக்குமார் திறந்து வைத்தார். அருகில் ரோட்டரி நிர்வாகிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து