திருஉத்தரகோசமங்கையில் அருள்மிகு வராகி அம்மன் ஆலய கும்பாபிசேகம்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Arulmigu Varagai Amman Temple 5 2 18

ராமநாதபுரம்,- ராமநாதபுரம்அருகே உள்ள புண்ணிதலமான திருஉத்தரகோசமங்கையில் அருள்மிகு வராகிஅம்மன் ஆலய கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது.
    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கையில் அருள்மிகு மங்களநாதர்-மங்கநாயகி ஆலயமும், அருள்மிகு பச்சை மரகதநடராஜர் ஆலயமும் உள்ளது. இதுதவிர இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வராகிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க புண்ணியதலமான இந்த பகுதியில் அமைந்துள்ள இந்த வராகி அம்மன் ஆலயம் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலய கும்பாபிசேகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. கடந்த 2000-ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெறும் இந்த கும்பாபிசேக விழாவையொட்டி ஆலயத்தில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று வராகி அம்மன் ஆலய கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை எராளமான வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க அருள்மிகு வராகிஅம்மன் ஆலய கும்பாபிசேகம் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட ஆலய கும்பாபிசேகம் சிறப்பாக நடந்தேறியது.
    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் மீது கும்பாபிசேக நீர் ஊற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அருள்மிகு வராகி அம்மனுக்கு பல்வேறு அபிசேக ஆராதாணைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான அறங்காவலர் ராணி பிரம்மகிருஷ்ணராஜராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் மன்னர் குமரன்சேதுபதி, ராணி லட்சமி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல்அலுவலர் ராமு, பேஸ்கார் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து