முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பதக்கம் : மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      பெரம்பலூர்
Image Unavailable

 

மாவட்ட அளவில் ஆண்களுக்கு மட்டுமான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நேற்று (06.02.2018) காலை எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, வரிசைப்பட்டி எஸ்.வி.எஸ்., பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூp, தந்தை ரோவர் உடற்கல்வித் துறை என எட்டு அணியினர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டி

 இதில் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அணியினர் முதலிடத்தையும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்

  இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஐயன், தடகளப்பயிற்றுநர் க.கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து