முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில், குரூப் 4ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு கூட்டம் : கலெக்டர் கு.ராசாமணி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திருச்சி
Image Unavailable

 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 11.02.2018 அன்று நடைபெறும் குரூப் 4ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி, தலைமையில் நேற்று (09.02.2018) நடைபெற்றது.

88 ஆயிரம் பேர்

முன்னேற்பாடு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும், 223 தேர்வு மையங்களில், 298 தேர்வு அறைகளில், 88 ஆயிரத்து 78 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். இப்பணிகளுக்கென 298 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 57 இயங்குக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், ஒரு வருவாய் உதவியாளர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் இயங்குவர்.

பறக்கும் படை

தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்ய துணை கலெக்டர் நிலையில் 20 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட 230 வீடியோகிராபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எந்தவித மின்னனு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பஷீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பழனிதேவி, அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் நரசிம்மன், தமிழ்நாடு போக்குவரத்து துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் 223 தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்கள், 57 இயங்கு குழுக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து