முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா? எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பா.ஜ.க.வின் பினாமி அரசு என சிலர் விமர்சிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு குறித்து காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சனங்கள் எழுப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை வழிநடத்திய மாபெரும் தலைவர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரது நினைவு மண்டபம், நினைவு இல்லம் திறப்பு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 1992-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். இப்போது ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழா, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இருக்கும்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றும், பா.ஜ.க.வின் பினாமி அரசு என்றும் சிலர் விமர்சிப்பார்கள். அ.தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிப்பார்கள். அழைக்காவிட்டால் ஏன் அழைக்கவில்லை என்ற கருத்தும் வரும். எப்படி செய்தாலும் விமர்சிப்பவர்கள் தொடர்ந்து ஏதாவது சொல்லி வருவார்கள். கிடப்பது கிடக்கட்டும் என்று எங்கள் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம். மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தமிழக அரசு உள்ளது.

ஜெயலலிதாவின் புகழ் போற்றத்தக்க வகையில் அவர் வழியில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்வோம். ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எல்லோரும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் ஜெயலலிதாவின் உருவப் படத்தை பேரவைத் தலைவர் மூலம் திறந்து வைத்தோம். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து