புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயற்சி பாப்ஸ்கோ ஊழியர்கள் 310 பேர் கைது

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      புதுச்சேரி
papsco mariyal

புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகிறார்கள்.

வேலை நிறுத்த போராட்டம்

 நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஊழியர்கள் புதுவை கம்பன் கலையரங்கில் ஒன்று கூடினர். பின்னர்  அங்கிருந்து சங்க ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபையை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலை அருகே வந்தபோது போலீசார் ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போலீசாரின் தடுப்பையும் மீறி பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாப்ஸ்கோ ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 310 கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து