முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் உத்தரவு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (15.02.2018) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,  தலைமையில் நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

இக்கூட்டத்தில் வருவாய்துறை, கல்வித்துறை, காவல்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 23 ஓய்வூதியர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த 13 ஓய்வூதியர்கள் திருத்திய ஓய்வூதியம், வீடு கட்டும் முன் பணம் பெற்ற அசல் ஆவணம் பெறுதல், குடும்ப ஓய்வூதியம், 5 மற்றும் 6-வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை கோருதல், பணிக்கொடை நிலுவை போன்ற கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர்  துறை வாரியாக அலுவலர்களுடன் ஆலோசனை செய்து காலதாமதம் இல்லாமல் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ்,   உத்தரவிட்டார்.     நிறைவாக இரண்டு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ.86 ஆயிரத்து 765-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சென்னை ஓய்வூதியரக இணை இயக்குநர்  மஞ்சுளா, துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கார்த்திகேயன், மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகா~;, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து