பெயின் பிவி நிறுவனத்தை பட்டியலிட ஏர்டெல் திட்டம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      வர்த்தகம்
airtel logo

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிரிக்கா பிரிவு நிறுவனமான பெயின் பிவி நிறுவனத்தை பட்டியலிட இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. பெயின் பிவி நிறுவனம் ஆப்பிரிக்க செயல்பாடுகளை கவனித்து வருகிறது. பெயின் பிவி நிறுவனத்தின் இயக்குநர் குழு பிப்ரவரி 12-ம் தேதி கூடி இந்த முடிவை எடுத்தது. நிறுவனத்தை எந்த பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, இதனை ஏற்று நடத்துவதற்கு நிறுவனங்களை நியமிப்பது குறித்து நிர்வாகக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பேச்சு வார்த்தை தொடங்கி இருப்பது என்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் பட்டியலிடுவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்படவில்லை என அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெயின் நிறுவனம் 14 ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அங்கு 3ஜி சேவைகள், ஏர்டெல் மணி ஆகிய சேவைகளை அளித்து வருகிறது. 4ஜி சேவையை நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் அளித்து வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து