முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேகோ சர்வ் நிறுவனத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளை இணை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மரவள்ளி விவசாயிகள், அரசு அலுவலர்கள், சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் அடங்கிய மரவள்ளி முத்தரப்பு கூட்டம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நேற்று(16.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.

கலெக்டர் பேச்சு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் இந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. சேகோ மற்றும் ஸ்டார்ச் ஆலை உரிமையாளர்கள் மற்றும் சேகோ, ஸ்டார்ச் விற்பனையாளர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களையும், கருத்துக்களையும் தெரிவித்தார்கள். மேலும், மரவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் அளவு இருப்பு மற்றும் அதனை கண்டறிதல் தொடர்பாக மரவள்ளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் விளக்கினார்கள்.

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 8,100 ஹெக்டேர் பரப்பு அளவில் மரவள்ளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் மரவள்ளி உற்பத்தி செய்கின்றனர். இதிலும் குறிப்பாக, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் அதிக அளவு மரவள்ளி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வருவாய் வட்ட அளவிலான சேகோ ஆலைகள் கண்காணிப்பு குழுவில் அந்தந்த பகுதி விவசாயிகளையும் உறுப்பினர்களாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ சர்வ் நிறுவனத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளை இணை உறுப்பினர்களாக சேர்க்க அடுத்துவரும் சேகோசர்வ் பொதுக்குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சாகுபடி

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பரப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் உற்பத்தியை கணித்து எதிர்வரும் விலை நிலவரத்தை முன்னறிவிப்பு செய்ய வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி வாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்கப்படும். கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை அமைப்பது குறித்து உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குர் செந்தமிழ்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணிக்குமார், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) மாரியப்பன், விவசாயிகள், சேகோ மற்றும் ஸ்டார்ச் ஆலை உரிமையாளர்கள் மற்றும் சேகோ, ஸ்டார்ச் விற்பனையாளர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து