தூய்மை இந்தியா-வில் கார் நிறுவனங்கள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க முன்வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கார்களில் ஒரு சிறிய குப்பை தொட்டியை வைப்பது என்றும் அதை முதல் முறையாக ஹூண்டாய் நிறுவனம் தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. ``ஸ்வாச் கேன்’’ என்ற பெயரிலான இந்த குப்பை தொட்டி அறிமுகத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் விளம்பர தூதரான ஷாருக் கான் சமீபத்தில் அறிமுகம் செய்தார்.
காரினுள் உள்ள இந்த சிறிய குப்பைத் தொட்டியில் பயணிப்பவர்கள் சிறிய துண்டு காகிதங்கள், சாக்லேட் பேப்பர்கள் உள்ளிட்டவற்றை போடலாம். இதனால் பயணத்தின் போது சாலைகளில் குப்பை போடுவது குறையும். தூய்மை இந்தியா இலக்கை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு வாகன உரிமையாளரும் இதைப் போல தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க முடியும். அதன் ஆரம்ப முயற்சிதான் இது என்று ஷாருக் கான் தெரிவித்தார்.