Idhayam Matrimony

வரி உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      புதுச்சேரி

தொழில் வரி, வணிக வளாக வரி, வணிக கட்டணம் ஆகியவற்றை புதுச்சேரி அரசு உயர்த்தி உள்ளது. அதோடு குடிநீர், சொத்து. மின்சாரம் ஆகியவற்றிக்கான வரியையும் உயர்த்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக நகராட்சிகள் மூலம் குப்பை அள்ளுவதற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.வரி உயர்வு மற்றும் புதிய வரி விதிப்பிற்கு புதுவையில் உள்ள அரசியல் அமைப்பினர், சமுக நல சங்கங்கள், இயக்கங்கள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மெலும் வரி உயர்வை கைவிடக்கோரி புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 24 மணிநேர கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று காலை 6 மணிக்கு கடையடைப்பு போராட்டம் தொடங்கியது.

கடையடைப்பு போராட்டம்

இந்த போராட்டத்தினால் புதுவையின் பிரதான சாலைகளான நேரு வீதி, காமராஜர் சாலை, காந்தி வீதி, அண்ணாசாலை, மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, 100 அடி ரோடு, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல பெரிய மார்க்கெட், சின்னமார்க்கெட், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதோடு பிரதான சாலைகளில் இயங்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடிக்கிடந்தன. வணிகர்கள் போராட்டத்திற்கு சினிமா சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் நேற்று திரையரங்குளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கடையடைப்பு போராட்டத்தா புதுவை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சிறிய டீ கடை, பெட்டிக் கடைகளும் மூடிக் கிடந்ததால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதே போல புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்திலும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அங்கும் பெரும்பாலன கடைகள், வர்த்தக நிறுவுனங்கள் மூடிக் கிடந்தன. போராட்டத்தை யொட்டி பிரதான சாலைகள் மற்றும் மக்கள் கூடும ;இடங்களில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். புதுவை நகரம் முழுவதும் வாகனங்களில் போலீசார் ரோந்தும் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து