முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் நபருக்கும், சேகரிக்கும் பணியாளர்களுக்கும், தங்க காசு வழங்கப்படும் சிவகங்கை கலெக்டர் லதா தகவல்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை.- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில்   பேரூராட்சிகள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்;டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  க.லதா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மானாமதுரை பேரூராட்சியின் மூலம் 18 வார்டுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் மாங்குளம் உரக்கிடங்கை பார்வையிட்டு அங்கு தயாராகும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரத்தினை பார்வையிட்டதுடன் தினந்தோறும் நகர் பகுதியில் குப்கைகள் சேராத வண்ணம் உடனுக்குடன் சேகரித்து உரக்கிடங்கிற்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பொருட்களை தரம் பிரித்து உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அப்பொழுது அலுவலர்கள் தெரிவிக்கையில் மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 8 டன் குப்பைகள் சேகரித்து கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. அதில் 5 டன் மக்கும் குப்பையும், 3 டன் குப்பையும் தரம் பிரித்து அதன் மூலம் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் ஒரு கிலோ ரூபாய் 2ஃ-க்கும், இயற்கை உரம் ரூபாய் 3ஃ-க்கும், விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்கள். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இப்பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு தேவையான அளவு விவசாய பணிகளுக்கு இயற்கை உரம் வழங்கிட வேண்டும் அதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பயன்படுத்தி சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
             நகர்ப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மேலும் நகரை தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில் பொதுமக்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக 01.03.2018-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் குப்பைகளை தரம் பிரித்து சிறப்பான முறையில் கையாளும் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு தங்க காசும், அதேபோல் உரியமுறையில் குப்பைகளை பரித்து வாங்கும் பணியாளர்களுக்கு தங்க காசும், சிறப்பான முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு 75 சதவீதத்திறக்கு மேல் குப்பைகளை தரம் பிரித்து பெறப்படும். கண்காணிப்பு அலுவலர்களுக்கு தங்க காசும், அதேபோல் தரம் பிரித்த குப்பைகளை சரியான முறையில் வாகனத்தில் ஏற்றி வாகன கிடங்கிற்கு கொண்டு வரும் வாகன ஓட்டுநருக்கு தங்க காசு என, 18 வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக தங்க காசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று முதல் அனைத்து வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் கடைகளில் கட்டாயம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். மேலும் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து தினந்தோறும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது பேரூராட்சித்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்திரவிட்டார்கள்.
                   இந்த ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  ராஜா, பேரூராட்சிகள் செயற்பொறியாளர்  குமரகுரு, மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர்  ஜான்முகமது, சுகாதார ஆய்வாளர்  அபுபக்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து