எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐ.பி.எல். 2026 தொடருக்கான அட்டவணை தயாரித்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
5 மாநிலங்களில்...
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை மிக பிரம்மாண்டமாக பி.சி.சி.ஐ. நடத்தி வருகின்றது. ஐ.பி.எல். 2026 தொடருக்கான மினி ஏலம் முடிந்து அனைத்து அணிகளும் அவர்களின் வீரர்களை இறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மார்ச் முதல் மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் ஐ.பி.எல். தொடருக்கான அட்டவணை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு திடல்களில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடும் 15-க்கும் மேற்பட்ட போட்டிகள் தேர்தல் நடைபெறவுள்ள சென்னை மற்றும் கொல்கத்தா திடல்களில் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் இந்த இரண்டு திடல்களில் போட்டிகளை நடத்தினால் சிக்கல் ஏற்படும்.
ஒரே கட்டமாக தேர்தல்...
தமிழகத்தில் பெரும்பாலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஆனால், மேற்கு வங்கத்தில் கடந்த முறை 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆகையால், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பே, ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று பி.சி.சி.ஐ. தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


