முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கியின் வளம் சார்ந்த முன்னுரிமை கடன் சார்ந்த திட்ட அறிக்கை : கலெக்டர் இல.நிர்மல்ராஜ் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கியின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த முன்னுரிமை கடன் சார்ந்த திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ், வெளியிட்டு தெரிவித்ததாவது.

 திட்ட அறிக்கை

நபார்டு வங்கியின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.3872.41 கோடி வழங்கிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2318.81 கோடியும், நீண்டகால கடனாக ரூ.665.12 கோடியும் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதே ஆண்டில் குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மதிப்பீடு ரூ.176.65 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி விவசாய கட்டமைப்புகள் உணவு மற்றும் பயிர் பதனிடு தொழில்கள், ஏற்றுமதிகடன், கல்வி, வீடு கட்டுமான கடன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக்குழுக்களுக்கு கடனாக முறையே ரூ.98.83 கோடியும் ரூ.222.38 கோடியும், ரூ.30.00 கோடியும், ரூ97.83 கோடியும், ரூ.71.44 கோடியும், ரூ.7.83 கோடியும், ரூ.160.71 கோடியும், ரூ.22.80 கோடியும் வழங்க இலக்கு நிர்ணக்கபட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன் சென்ற 2017-18 ஆம் ஆண்டை விட 12மூ அதிகரித்துள்ளது. எநபார்டு வங்கியானது ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை மேம்படுத்த மாவட்ட வாரியான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை 1980 ஆண்டு முதல் தயாரித்து வெளியீட்டு வருகிறது மேலும் இதனை பயன்படுத்தி வேளாண் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை விரைந்து மேம்படுத்த அலுவலர்களை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் பேட்ரிக் ஜாஸ்பர், முன்னிலை வகித்தார் நபார்டு வங்கியின் திட்ட அறிக்கையின் முதல் பிரதியை இந்திய ஓவர்சிஸ் வங்கியின் மண்டல மேலாளர் ஜீ.பத்மநாபன் திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் எழிலரசன், ஆகியோர் மாவட்ட கலெக்டர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து