எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், வெள்ளுர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
அரசின் சாதனை
இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அரசின் சாதனைகள், திட்டங்கள் பற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தொடர்ந்து வெளிவந்தாலும்,
இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் புகைப்படக் கண்காட்சி அமைக்கும் போதுதான், திட்டங்கள் பொதுமக்களை எளிதாகச் சென்றடையும். அதன்படி முசிறி வட்டம், வெள்ளுர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைவிளக்கும் புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீட்டுவசதி திட்டம், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இருமடங்காக உயர்வு, பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா அரிசி, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய ஏராளமான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.
இப்புகைப்படக் கண்காட்சியை ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.பாபு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உதுமான்முகைதீன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர்.சம்சாத்பேகம், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், முசிறி வட்டாட்சியர் கருணாநிதி மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |