ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா: அமைச்சர் ஜி பாஸ்கரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      சிவகங்கை
Amma scoostor  6 2 18

 சிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்குதல் மற்றும் சமூகநலத்துறையின் மூலம் படித்த ஏழை பெண்களுக்கு திருமாங்கல்யத்துடன் திருமண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி பேசுகையில்,
          மறைந்தும் மறையாமலும் தமிழக மக்கள் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய  தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன்  அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தனது கனவு திட்டங்களின் ஒன்றான உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வண்ணம்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70-வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது பிறந்த தினமான 24.02.2018 அன்று  பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
         இத்திட்டத்தின் நோக்கம் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும். தனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முன்வர வேண்டும் என்பதேயாகும். பொதுவாக வீட்டில் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் இருந்தால் அந்த வீடு முழுமையான வளர்ச்சியை பெரும். அந்த வகையில் பெண்கள் சுயமாக தொழில் செய்திடவும் தங்களது கல்விக்கேற்ப பணிகளை அமைத்துக்கொள்ளவும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்திட ஏதுவாக அவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு 50 சதவிகித மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்க உத்திரவிட்டு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைக்க வருகை புரிந்து நம்  பாரத பிரதமர் அவர்கள் பெண்களுக்காக தமிழகத்தில் மிக பல்வேறு திட்டங்களை வழங்கியமைக்காக  புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இதுபோல் எண்ணற்ற திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான்  புரட்சித்தலைவி அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணியினை  தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
           இன்று நமது மாவட்டத்திற்கு 1,919 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டு, முதற்கட்டமாக 100 வேலைக்கு செல்லும் மகளிர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வண்ணம் 50 சதவிகித மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
.          இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  து.இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  காஞ்சனா, மகளிர் திட்ட இயக்குநர்  இளங்கோ, மாவட்ட சமூகநல அலுவலர்  .வசந்தா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  சகுந்தலா மற்றும் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து