பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களுக்குவிழிப்புணர்வு கூட்டம் அலுவலர் மரு.மா.சவுமியா சுந்தரி தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      பெரம்பலூர்
Perambarlur 0

 

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.மா.சௌமியா சுந்தரி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று (09.03.2018) மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

விழிப்புணர்வு

இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைப்பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. சமையல் செய்பவர்கள் உணவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமாகவும் சமைத்து தர வேண்டும் எனவும், காலாவாதியான உணவு பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. உணவுபொட்டலத்தில் குளுளுயுஐ பதிவுஉரிமம் எண்; அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுபொட்டலத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுப்பொருட்கள் குசைளவ ஐn குசைளவ ழுரவ முறையில் அடுக்கிவைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

மேலும் உணவு தயார்செய்யப்படும் இடம் சுகாதாரமாக இருக்கவும், குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து தரப்படும் பாத்திரங்கள் கழுவி பயன்படுத்தவும், சமையல் செய்பவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கவும், குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு அதற்கான பதிவேடுகளை பராமரிக்கவும், பார்வையாளர்கள் பதிவேடு பராமரிக்கவும், உணவுமாதிரிகள் சமைத்தவுடன் எடுத்துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சமைப்பவர்களுக்கு உணவுப் பொருட்களில் அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்;கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனைத்து உணவு நிறுவனங்களிலும் அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளிலும் உள்ளாக வாட்ஸ்அப் புகார் எண் ஒட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் அனைத்து அங்கன்வாடி மையுங்களுக்கும் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, வாட்ஸ்அப் எண் 9444042322 கொண்ட சுவரொட்டிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி மற்றும் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களும் மற்றும் சுமார் 410 நபர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து