முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்தைவிட மகிழ்ச்சி மிகமுக்கியமானது அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:

புதன்கிழமை, 14 மார்ச் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி- வணிகவியலின் பெருமிதம்  என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் “வணிகவியலின் பெருமிதம்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் கலையரங்கில் நடத்;தப்பட்டது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமையுரையில், பணத்தைவிட மகிழ்ச்சி மிகமுக்கியமானது.  எத்தனைவருடம் வாழ்ந்தோம் என்பதை வைத்து நமதுவாழ்வு அமைவதில்லை.  எவ்வளவு நாள் மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தகம் சார்ந்த அனைத்து துறைகளிலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். நுகர்வோர் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வர்த்தகத்தில் நுகர்வோரைத்திருப்தி படுத்துவதே முதல் பணியாக இருக்க வேண்டும்.  நுகர்வோரை திருப்தி படுத்தாமல் வர்த்தகம் செய்வதில் அர்த்தம் இல்லை.  கல்விநிறுவனங்களும், தமது நிறுவனம் சார்ந்த அனைவரின் தேவைகளையும் உணர்ந்து அவற்றை திருப்தி செய்வதற்கேற்ப திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.  ஒருநாட்டின் வளர்;ச்சி அந்தநாட்டின் வர்த்தகவளர்ச்சியை பொறுத்து அமைகின்றது.  வர்த்தக கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மேற்கொள்ளவேண்டிய தொழில் முனைவுசார்ந்த திட்டங்களையும் வலியுறுத்தி அவற்றில் மாணவர்களின் பங்கினையும் பற்றிவிளக்கிப் பேசினார். இக்கருத்தரங்கு நடத்துவதற்கு மாணவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி வாழ்த்தினார்.
பேரா.என். தாணுலிங்கம், மேனாள் துறைத் தலைவர், வணிகவியல் துறை, மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், தமது தொடக்க உரையில், பெண் தொழில் முனைவோர்களின் முக்கியத்துவத்தையும், பெண்கள் மேம்பாட்டினையும் விவரித்துப் பேசினார்.  நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சேவை தொழில்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். இந்தியாவில் வணிகவியல் படிப்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சிப் பற்றி விளக்கினார்.
முனைவர் ஜி. ஜெயபால், பேராசிரியர் மற்றும் தலைவர், வங்கிமேலாண்மைத் துறை, முனைவர். எஸ்.ராஜ்மோகன், முதன்மையர், கல்லூரி வளர்ச்சிக் குழுமம், முனைவர் எம்.செந்தில், பேராசிரியர் மற்றும் தலைவர், தளவாடவியல் மேலாண்மைத் துறை, முனைவர் கே. ஊதய சூரியன், பேரரிசிரியர் மற்றும் தலைவர், பன்னாட்டு வணிகவியல் துறை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேரா.டி.ஆர்.குருமூர்த்தி, பேராசிரியர் மற்றும் தலைவர், வணிகவியல் துறை அனைவரையும் வரவேற்றார்.  முனைவர் கே. கனகவல்லி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து