எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் நன்னிலம், பூந்தோட்டம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் வயலில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயலில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கண்ணீரில் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


