விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      விழுப்புரம்
On behalf of the Villupuram District Business Center  a seminar was held by the Collector Mr L Subramanian

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய அரசின் தேசிய பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் மைய திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் கொள்முதல் செய்யக்கூடிய பொருட்களின் 20மூ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் 4மூ பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டுமென்ற திட்டத்தினை பிரபலப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:

கருத்தரங்கம்

இக்கருத்தரங்கில் குறிப்பிடப்படும் பல்வேறு கருத்துக்களை தொழில் முனைவோர் கவனமுடன் அறிந்து, முன்னேற வேண்டும். இக்கருத்தரங்கத்தின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டு, பயனடைய வேண்டுமென்பதே ஆகும்.  பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து, அதன் மூலம் பழங்குடியின நிறுவனங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருட்களில் கட்டாயமாக 4மூ பொருட்களை பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யமுடியாமல், அந்நிறுவனங்களை மூடிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.  இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது.  எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டாயமாக ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும்போது அதில் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய உரிமையோடு கோர வேண்டும்.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட வேண்டுமெனில், பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு தரமாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்ய வேண்டும்.  தங்கள் பொருளை மற்றவர்கள் தேடி வந்து வாங்கும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்யும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தொழில் செய்வதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், நாம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்ப வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, தமிழக அரசின் மான்யமாக 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் பல்வேறு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம்.  இதில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  இதில் ஊரக பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சவீதமும், நகர பகுதிகளில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மான்யமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இத்திட்டங்களின் மூலம் கடன் பெற்று இளைஞர்கள் தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.தொடர்ந்து, சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், தமிழ்நாடு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், என்எஸ்ஐசி புதுச்சேரி கிளை மேலாளர் ரங்கநாதன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து