எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை. - சிவகங்கையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும், இக்கண்காட்சியில் அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களின் பயன்கள் குறித்தும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் சிவகங்கை மாவட்டத்தின் ஓராண்டு சாதனை விளக்க கையேட்டினை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் வேளாண் பொறியியல் துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் (பொ) இராமபிரதீபன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கருப்பணராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


