முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தடையால் இந்திய ரசிகர்களின் கோபத்திலிருந்து ஸ்மித், வார்னர் தப்பினர் இயன் சாப்பல் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன்: பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடைக்குப் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஸ்மித், வார்னர் தடை செய்யப்பட்டதால் இந்திய ரசிகர்களின் கோபத்திலிருந்து அவர்கள் தப்பினர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
வார்னர், ஸ்மித் ஆகியோரின் பேங்க் பேலன்ஸ் அடி வாங்கியுள்ளது. ஐபிஎல் தடையினால் இந்திய மக்களின் கோபத்திலிருந்தும் தப்பியுள்ளனர், மேலும் பிசிசிஐ வீரர்கள் நடத்தையின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான அறிகுறியுமாகவும் இந்தத் தடை விளங்குகிறது.

பிசிசிஐ-யின் சமீபத்திய நிர்வாகம் சில காலங்களாக அவ்வளவு உத்வேகமூட்டுவதாக இல்லை. இப்போது இந்தத் தடை உத்தரவால் அதன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதை குறிக்கிறது என்றால் கேப்டவுன் விவகாரம் முழு இருட்டடிப்புக்குச் செல்லாமல் இருந்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஐசிசி ஆகிய அமைப்புகள் கிரிக்கெட் உலகில் நடத்தை கீழ்மட்டத்துக்குச் சென்றதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தொடர்ந்து களத்தில் மோசமான நடத்தையை அவர்கள் கண்டிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆட்டத்தின் மீதான பெயருக்கு கடும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஏதாவது ஒன்று படு மோசமாக நிகழ்ந்தால் மட்டுமே செயல்படுவோம் என்பது சரியான அணுகுமுறையல்ல.
ஸ்மித், வார்னர் செய்கையினால் கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மை சரிவு கண்டு அடிமட்டத்துக்குச் சென்றுள்ளது.
எனவே கிரிக்கெட் நிர்வாகிகள் மட்டத்தில் வலுவான தலைமை தேவை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது
ஸ்மித் வார்னர், பேங்ராப்டுக்கு உடனடியாக இதன் விளைவுகள் ஏற்பட்டுள்ளது, ஆனால் காலம் முழுதும் இவர்களுடன் நிழலாய் இந்த கறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இப்படிப் பந்தைச் சேதம் செய்யும் தப்பும்தவறுமான, மோசமான முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ஒரு விழிப்பை ஏறப்டுத்தும் என்று நம்புவோம், இது 3 ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து