முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு மீது வழக்கு தொடர அனுமதி மறுப்பு புதுச்சேரி ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் தர்ணா போராட்டம்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      புதுச்சேரி

காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரும், புதுவைக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் இதை செயல்படுத்த 6 வார காலத்துக்குள் ஸ்கீம் அமைக்க வேண்டும் என்று கூறியது.இந்த ஸ்கீம் என்ற அமைப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

கிரன்பேடியை கண்டித்து கோஷம்

ஆனால் கடந்த வியாழக்கிழமையோடு கெடு முடிந்த நிலையிலும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை. இதனால் தமிழக அரசு மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதே போல புதுவையிலும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு செய்தது. புதுவை யூனியன் பிரதேசம் ஆகையால் இது போன்ற வழக்கு தொடர வேண்டும் என்றால் கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும். எனவே அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் கிரன்பேடி மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை. அந்த கோப்பை திருப்பி அனுப்பினார். கவர்னர் அனுமதி அளிக்காததால் புதுவை அரசு வழக்கு தொடர முடியாத நிலை எற்பட்டுள்ளது. எனவே அரசு கொறடா அனந்தராமன் மூலம் தனி நபர் வழக்கு தொடர முயற்சித்து வருகிறது. அரசு சார்பில் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கிடைக்காதது தொடர்பான தகவல் வெளியானதும் புதுவை அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் குதித்தனர். சட்டமன்ற அதிமுக தலைவர் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வந்தனர்.  கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு மீது வழக்கு தொடர அனுமதி தராத கவர்னர் கிரன்பேடியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னர் மாளிகை முன்பு எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்  நடத்துவதை அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கவர்னர் மாளிகை முன்பு திரண்டனர். இதனால் கவர்னர் மாளிகை முன்பு திடீர் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கவர்னர் மாளிகை முன்பு யாரும் செல்ல முடியாத அளவிற்கு இருபுறமும் பேரிகார்டுகளை வைத்தனர். மேலும் அதிக அளவு போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு போலீசார் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து