காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் நாகர்கோவிலில் உண்ணாவிரதம் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்,விஜயகுமார் எம்.பி.பங்கேற்பு

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      கன்னியாகுமரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதப் போராட்டம்

குமரி மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் மாவட்ட அதிமுக செயலாளர் விஜயகுமார் எம்.பி தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசும்போது, இந்த போராட்டம் மக்களின் உணர்வு ரீதியான போராட்டம் ஆகும். காவிரி பிரச்சினை டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமுள்ள பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை ஆகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரிக்காக நாம் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. நியாயமாக நாம் பெற வேண்டிய தண்ணீரை பெற்றே தீருவோம் என்றுகூறி, அதற்கான போராட்டங்களை நடத்தி வெற்றியும் கண்டார். காவிரி தீர்ப்பில் தமிழகத்துக்கு 15 டி.எம்.சி தண்ணிர் குறைக்கப்பட்டிருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அதனால் தான் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டார்கள். அதன் கட்டமைப்பு என்று பொருள் என சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 9ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். உணர்வுரீதியான பிரச்சினையில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். அந்த வகையில் திமுக போராட்டத்தை வரவேற்கிறோம் என்று கூறினார்.போராட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பிரசாத், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஞானசேகரன், மாவட்ட பால்வள தலைவர் அசோகன், மாநில மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ முத்துகிருஷ்ணன், மு. மாவட்ட செயலாளர்கள் ஜாண் தங்கம், சிவசெல்வராஜன், ஒன்றிய செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், நகர செயலாளர் சந்திரன், சிறுபான்மை பிரிவு ஜஸ்டின் செல்வராஜ், மாணவரணி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் முருகேஸ்வரன், காரவிளை செல்வன், ஆனந்த், சிவா, கோட்டார் கிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து