சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஆந்திராவில் இன்று பந்த்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Jegan Mohan 05 08 2017

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, இன்று 16-ம் தேதி  மீண்டும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக இன்று 16-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பிரதமர் மோடி ஆந்திர மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். இதனை கடந்த 4 ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் இருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களிடம் நற்பெயரைப் பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளார். இது கண்துடைப்பு நாடகம். எனவே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை நடைபெறும் முழு அடைப்புக்கு எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து