முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ.79.79-க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.71.87-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9வது நாளாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கச்சா எண்ணை விலை தொடர்ந்து ஏறி கொண்டே இருப்பதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் 9-வது நாளாக நேற்றும் பெட்ரோல்–டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79- க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.71.87-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து