போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது ஒருவனுடைய நற்பண்புகள் அழித்து விடுகிறது அழகப்பா பல்கலைக்கழ துணைவேந்தர் பேரா.இராஜேந்திரன் பேச்சு

alagappa univercity news

 காரைக்குடி-  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தல் தொடர்பான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் (வுhநஅந) “குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல்; மற்றும் ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுதல்” என்பன ஆகும். 
 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில் உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 3.6 முதல் 6.6 சதவிதம் பேர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 1987ல் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தேசிய போதை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் இயற்கையாகவே மனநிலை பாதிக்கும் பொழுது ஏதாவது ஒரு வகையில் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். எனவே போதை பழக்கத்தை ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் போதைக்கு அடிமையானவர்களை அவற்றிலிருந்து காப்பாற்ற நாம் முன்வர வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது ஒருவனுடைய நற்பண்புகள் அழித்து விடுகிறது. அதனால் சமுக சேவை மற்றும் மாணவர்கள் ஆலோசனை மையங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி போதைப் பழக்கத்திலிருந்து அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
 தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் துணைத் தலைவரும் மற்றும் காரைக்குடி தேவகி மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான டாக்டர் சுஏளு.சுரேந்திரன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.  அவர் தம் உரையில் ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம்; பேர் போதைப் பழக்கத்தால் உயிர் இழக்கிறார்கள். 15 வயதிலிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.  மருத்துவருடைய மருந்துக் குறிப்புகளை தவறாக புரிந்து கொள்ளாமல் குறிப்பில் உள்ளபடி முறையாக மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.  நோய் இருக்கும்வரையே மருந்துகளை உபயோகிக்க வேண்டும் தொடர்ந்து மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் கிட்னி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். போதைக்கு அடிமையாவதால் இளைஞர்கள் இலக்கு இல்லாமல் இருக்கிறார்கள்.  இலக்கு நிர்ணயிக்கும் தன்மையை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.  போதைக்கு அடிமையாவதால் ஒரு தனி மனிதனுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அவரோடு தொடர்புடைய குடும்பமும் நாடும் பாதிக்கப்படுகிறது.   போதை மருந்து ஆசையை தூண்டுகிறது அதனால் அவர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதைப் பொருள்களால் எவ்வித நன்மைகளும் கிடையாது. போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் உடல் உறுப்புகளில் கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைகிறது. புகைப்பிடிப்பதன் மூலம் 40 சதவிதம் நுரையீரல் சம்பந்தமான புற்றுநோய் உண்டாகிறது என்றும் குறிப்பிட்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தன்னைப் போல பிறரையும் குடிக்க வைத்து மகிழ்வார்கள். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்கள் வாழ்வு சிறக்க நாம் அனைவரும் சமுதாய கடமையை ஆற்றவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 பதிவாளர் பேரா. ஹா.குருமல்லேஷ் பிரபு வரவேற்புரை ஆற்றினார். பேரா. வெ.பழனிச்சாமி, முதன்மையர், மாணவர் நலன் நன்றி கூறினார். அழகப்பா பல்கலைக்கழக கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர்கள் கி.மகேஷ், பெ.ஈஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். அதனைத் தொடர்ந்து 150க்கும் மேற்பட்;ட பல்கலைக்கழகத் திறன் மேம்பாட்டு மைய மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழக முகப்பு வளைவு வரை சென்று முடிவுற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து