எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பனைஓலைப் பொருட்கள் தொழில் ஒத்த தொழிற் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மையங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெடுமறம் ஊராட்சியில் ஒத்த தொழிற் குழுவினர் பனைஓலையில் தயாரிக்கப்படும் கலைப்பொருட்களை பார்வையிட்டு குழுவின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். குழுவின் பணிகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,
மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து சுயஉதவிக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தொழில் அமைப்பதற்கு தேவையான பயிற்சிகளும் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியும் மகளிர் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 30 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு குழுவிற்கு ரூ.1,00,000ஃ- வரை கடன் உதவி பெற்று அதை மூலதனமாக வைத்து தங்கள் பகுதியில் உற்பத்தி செய்கின்ற அளவிற்கு உள்ள தொழில் அமைப்பு உருவாக்கி செயல்படுகின்ற வகையில் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு நவீனமுறையில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் அழகுச்சாதனப் பொருட்கள், பொம்மை வகைகள், கூடை வகைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதன் மூலம் வருகின்ற வருமானத்தில் சுயஉதவிக் கடன் செலுத்துவதுடன் ஒவ்வொருவருக்கும் வாரம் ரூ.1,000ஃ- வருமானம் ஈட்டப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தை எவ்வித சிரமின்றி வழிநடத்த பயனுள்ளதாக இருந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
பின்னர் ஆவுடையார் ஊராட்சிப் பகுதியில் ஒத்த தொழிற் குழுவினர் அழகுச் சாதனப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களின் திறமையை பாராட்டியதுடன் தங்கள் உற்பத்திப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் அதிகளவு வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்ற அளவிற்கு உங்களது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் இந்த தொழில் மையங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு
வழிகாட்;;டியாக அமைவது மட்டுமன்றி மாவட்டத்தில் இதேபோல் மக்களுக்கு தேவையான பொருட்களை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக குழுவாக இக்குழு அமைய வேண்டும் என தெரிவித்ததுடன் மேலும் இதேபோல் ஒத்த தொழிற் குழுவினர் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பொழுது அதிகளவு விற்பனையாவதன் மூலம் வருவாய் அதிகளவு கிடைப்பதால் வாங்குகின்ற சுயஉதவிக் குழு கடனையும் எளிதாக திருப்பிச் செலுத்துவதுடன் ஒவ்வொவருக்கும் போதிய வருமானமும் கிடைக்கின்றது. அதேபோல் வங்கியில் முறையாக கடனை திருப்பி செலுத்தும் பொழுது வங்கிகள் மற்ற குழுக்களுக்கு கடன் கொடுக்க எளிதாக இருக்கும். அதன் மூலம் மாவட்ட அளவில் அதிகளவில் குழுக்கள் சுயதொழில் அமைத்திட முடியும். அதன் மூலம் அதிகளவில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட முடியும். மகளிர் திட்டத்தின் மூலம் போதிய அளவு சுழல்நிதி கடன் மற்றும் தொழிற் பயிற்சி வழங்க தயாராக உள்ளது. இதை சுயஉதவிக் குழுவினர் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தெரிவித்தார்.
பின்னர் 3 நபர்களுக்கு தலா ரூ.20,000 - தனிநபர் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


