சென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை

புதன்கிழமை, 18 ஜூலை 2018      சினிமா
serial actress suicide 2018 7 18

சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரபல டி.வி. நடிகை பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு

சென்னை வளசரவாக்கம் காம கோடி நகரில் வசித்தவர் பிரியங்கா (32). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம் என்ற சீரியல் இவர் நடித்து வந்த பிரபலமான சீரியலாகும். பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் சில காலம் முன்பு நடித்து வந்தார். இவரது கணவர் அருண்பாலா (38). இவர் கூடைப்பந்து பயிற்சியாளர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என்ற பிரச்சினை பெரிதாக வெடித்து சில வருடங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை பெரிதாக வெடித்த நிலையில் கணவன் மனைவி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. பிளவு அதிகரித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் அருண்பாலா பிரிந்துச் சென்றுவிட்டார். இதற்கிடையே விவாகரத்துக்கோரி இருவரும் மனு செய்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் தனியாக வசித்து வந்த பிரியங்கா, நேற்று மூன்தினம் இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார். தினமும் காலையில் பால்பாக்கெட்டை ஒரு நபர் போட்டுவிட்டுச் செல்வார். அவர் பால் பாக்கெட்டை எடுக்காவிட்டால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி எழுப்பிவிடுவார்களாம். நேற்றும் அதேபோன்று பால் பாக்கெட்டை எடுக்காமல் இருந்ததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால் நெடுநேரம் தட்டியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரியங்கா தூக்கில் தொங்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தகிரி, நரசிம்மமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிரியங்காவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் எதையும் கடிதமாக எழுதி வைக்கவில்லை. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடும், குழந்தை இல்லாத ஏக்கமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரியங்காவின் தற்கொலை குறித்து புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் கணவர் அருண் பாலாவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் ?

பிரியங்காவுக்கும், கூடைப்பந்து பயிற்சியாளரான அருண்பாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதன் காரணமாகவும், குழந்தை இல்லாத ஏக்கத்திலும் பிரியங்கா மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் அருண்பாலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அருண்பாலாவும், பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அருண்பாலா கூடைப்பந்து பயிற்சியாளர் என்பதால் பள்ளிகளில் அது தொடர்பான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

அப்போது அவருக்கு பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி தான் பிரியங்காவுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அருண்பாலா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். பிரியங்கா நடிகையான பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இருவரும் பிரிந்துள்ளனர். முறைப்படி விவாகரத்து பெறுவதற்காக வக்கீல்களுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளனர். பிரியங்காவை பிரிந்த பின்னர் அருண்பாலா வளசரவாக்கம் வீட்டுக்கு வருவதில்லை. நண்பர் ஒருவருடன் தங்கி உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது. இதுவே பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து