முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி கொலிஜியம் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்....
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது இந்திரா பானர்ஜி உள்ளார். இவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விரைவில் அறிவிக்கப்படுவார். இந்திரா பேனர்ஜி தவிர்த்து மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டிற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ்.கவுல் கடந்த கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டபோது, இந்திரா பேனர்ஜி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

தஹில்ரமணி பெயர்...
இந்நிலையில் இந்திரா பேனர்ஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், அவருடைய இடத்திற்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து