உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      விளையாட்டு
New Zealand-2018 07 22

மதுரை: உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு தெரிவித்தார்.

மதுரையில் 21 மாநிலங்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ரக்பி 7எஸ் என்ற போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏறத்தாழ 650 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.பொதுவாக இந்த ரக்பி போட்டி என்பது ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து, ஆகிய போட்டிகளை உள்ளிடக்குவதாகும் இதில் நமது தமிழ்நாட்டிற்கு மிகவும் வீரம் செரிந்த விளையாட்டாகும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 நபர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டில் 14 நிமிடம் விளையாடப்பட்டு வருகிறது.

இந்த போட்டியினை தமிழ்நாடு ரக்பி கால்பந்து தலைவர் வி.வி.ராஜ்சத்யன் ஏற்பாடு செய்து வந்தார். இதனையொட்டி தமிழ்நாடு ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் மற்றும் அம்பாசிடராக நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி மதுரையில் நடைபெறும் இந்த விளையாட்டினை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை கூறினார்.

பின்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ்   செய்தியாளர்களிடம் கூறியதாவது:-    
உலகளவில் 120 நாடுகள் விளையாடும் விளையாட்டு என்றால் அது ரக்பி கால்பந்தாட்ட விளையாட்டுத்தான். நான் சிறுவயது முதல் இந்த விளையாட்டை நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். ஆனால் எனக்கு ரக்பி விளையாட்டு மோகம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கிரிக்கெட்டில் நாட்டம் அதிகம் உண்டாகி நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினேன்.

எனக்கு இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிடிக்கும். அதில் பந்துவீச்சாளர்கள் என்றால் புவனேஸ்குமாரையும், பும்ராவையும் மிகவும் பிடிக்கும். பேட்ஸ் மேன் என்றால் விராட்கோலியை ரொம்ப பிடிக்கும். தற்போது கிரிக்கெட்டில் 10 -க்கும் மேற்பட்ட நாடுகள் தான் சர்வதேச போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால் ரக்பியை எடுத்துக்கொண்டால் 100 நாடுகள் சர்வதேச போட்டிளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ரக்பி போட்டி என்பது வெளிநாடுகளில் விளையாடும் புல், (காளை அடக்குவது) கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டை உள்ளடக்கியது தான் இந்த போட்டியாகும். இந்த போட்டி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெறவில்லை. இந்த விளையாட்டை முக்கியமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகின்றது. இதற்கு முதன் முதலாக ஊக்கமளித்தவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். அவர் தான் சென்னையில் இந்த போட்டியினை நடத்த ரூ.1கோடி நிதி கொடுத்து உதவினார்.

தற்போது தமிழ்நாடு அரசு இந்த போட்டியினை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக எனக்கு செய்தி வந்தது எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் தமிழக அரசு அதிகமாக ஊக்கமளித்து வருவதாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து வருகிறேன். தமிழ்நாடு இளைஞர்களுக்கு மிகவும் திறமை அதிகமாக உள்ளது. இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் தமிழகத்தில் இந்த விளையாடடு அசுர வளர்ச்சி பெறும் தொடர்ந்து ரக்பி விளையாட்டிற்கு ஊக்கமளித்து வரும் தமிழக அரசிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் இங்கு விளையாடும் வீரர்கள் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரக்பி சங்க தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மீனாட்சிஅம்மன் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து