முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் தேனி கலெக்டர் திடீர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018      தேனி
Image Unavailable

தேனி,- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் தேனி நகராட்சிப்பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், காலை 6.00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குடியிருப்புகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து வாங்கும் பணி, டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு பணி, உடற்பயிற்சி மையம், இறகு பந்து அரங்கம், பூங்கா பராமரிப்பு பணி, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணி, முல்லை பெரியாறு ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம், தேனி நகராட்சிக்குட்பட்ட திட்ட சாலை பகுதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்,
 தூய்மை காவலர்களின் பணியானது மிகவும் மகத்தானது, பொதுமக்கள் சுகாதாரமாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திட தூய்மை காவலர்களின் பணி மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்தும், பிளாஸ்டிக்னால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தூய்மை காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குடியிருப்புகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறது. மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரங்களாகவும், மக்காத குப்பைகளை கொண்டு மறு சுழற்சி முறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தினை உருவாக்கிடுவதற்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வரும் ஆகஸ்ட்-15-க்குள் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 குடியிருப்புகளில் நல்ல நீரில் வளரும் லார்வா கொசு புழுக்களை அழித்திட தொடர்ந்து கொசு புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். முல்லையாற்றிலிருந்து பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சிப்பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்ப்படும் குடிநீர் காற்றேற்றம் செய்து சரியான அளவில் குளோரின் கலந்து முழு பராமரிப்புடன் குடிநீர் விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து அதிகமாகவுள்ளதால், ஆற்றங்கரைப்பகுதிகளில் குளிப்பது, துவைப்பது போன்றவற்றையும், குழந்தைகளை தனியாக ஆற்றங்கரைங்களுக்கு செல்வதை தவிர்த்திட வேண்டும். ஆற்றங்கரைப்பகுதிகளில் இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பாதகைகள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்               ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார்,  ., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.சேதுராமன், உதவி செயற்பொறியாளா சி.கருப்பையா, செயல் அலுவலர்கள் மு.சித்திரைக்கனி, செந்தில்குமார் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து