இரு மாடல் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசூகி

புதன்கிழமை, 25 ஜூலை 2018      வர்த்தகம்
Maruti Suzuki

இந்திய கார் விற்பனை சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, புதிய ஸ்விப்ட், டிசைர் மாடல் கார்களில் ஏர் பேக் கோளாறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எனவே, இவற்றை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம்,  கொடுத்து இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நிகழாண்டு மே 7 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆகிய காலகட்டத்திற்குள் தயாரிக்கப்பட்ட டிசைர் மற்றும் புதிய ஸ்விப்ட் மாடலின் 1,279 வாகனங்களை (566 புதிய ஸ்விப்ட், 713 புதிய டிசைர்)  திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். இந்த கார்களின் உரிமையாளர்கள் மாருதி ஏஜெண்டுகளிடம் சென்று தங்கள் கார்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கட்டணமின்றி சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து