ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு

siva news

   சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கொல்லங்குடியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி துவக்க விழா மற்றும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டதுடன் இக்கண்காட்சியில்  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்து வழங்கி வரும் திட்டங்கள் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் உள்ளது. எனவே இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அரசின் திட்டங்கள் தெரிந்து பயன்பெற்று கொள்ளும் வகையில் இந்த புகைப்படக் கண்காட்சியை பார்த்திட வேண்டுமென தெரிவித்ததுடன் தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
           மேலும் இச்சிறப்பு முகாமில் கொல்லங்குடி, கீரனூர், கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியக்குறிச்சி, அழகாபுரி, மேப்பல், பெரியநரிக்கோட்டை, நடுவாளி, அல்யூரணி தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இன்று பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 250 மனுக்கள் பெறப்பட்டதுடன் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன் அமைச்சர்  பேசுகையில்,
             புரட்சித்தலைவி அம்மா   நல்லாட்சியுடன் ஆட்சி புரியும்  தமிழ்நாடு முதலமைச்சர்  மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  நல்வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக
சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்த திட்;டமிட்டு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சியாக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெற்று உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே நான்கு சிறப்பு மூகாம்கள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது  தொடர்ந்து இன்று கொல்லங்குடி ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது மட்டுமன்றி உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. தங்கள் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்குரிய தேவைகள் மற்றும் ஊரின் வளர்ச்சி குறித்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   தெரிவித்தார்.
         இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்இளங்கோ தாயுமானவன், காளையார்கோவில் வட்டாட்சியர்  பாலகுரு,  முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்; பழனிச்காமி, முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவர்கள் சசிக்குமார்,  பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து