முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியி;ல் அ.தி.மு.க ஊழியர் கூட்டத்தில் நகர செயலாளர் பழனிராஜ் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

போடி.- தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அ.இ.அ.தி.மு.க  நகர் கழகம் சார்பில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் நகர செயலாளர் பழனிராஜ் உள்பட புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க-வின் தேனி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர்.
 இதனை தொடர்ந்து போடியில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் அவைத்தலைவர் கனல்.காந்தி தலைமையிலும், நகர செயலாளராக பொறுப்பேற்று கொண்ட பழனிராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்ட போடி பகுதியை சேர்ந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்து புதிய நிர்வாகிகளுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 இக்கூட்டத்தில் நகர துணைச்செயலாளர் ரமேஷ், சிறுபான்மை பிரிவு நகரசெயலாளர் அஜீஸ்கான், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் சுகுமார், மாணவரனி மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாறைப்பட்டி முருகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளர் பழனிவேல், இளைஞர் பாசறை மாவட்ட துணைச்செயலாளர் ராமச்சந்திரன், பாசறை நிர்வாகிகள் சரவணன், கோபிநாத், சுதர்சன், கழக பிரமுகர்கள் இன்சுரன்ஸ் ராஜா, மணிகண்டன், குணசுந்தரி ஜெயராமன், தொழிற்துட்ப பிரிவு அருண், மாவட்ட பிரதிநதி அபுதாஹிர், கூல்ராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முருகன், போடி நகர 33 வார்டு கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, நகர, சார்புஅணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து